மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் சைலேந்திரபாபு ஆய்வு


மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் சைலேந்திரபாபு ஆய்வு
x
தினத்தந்தி 11 Oct 2021 2:32 PM IST (Updated: 11 Oct 2021 2:32 PM IST)
t-max-icont-min-icon

டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஞாயிறுதோறும் சைக்கிளில் சென்று சென்னைக்கு அருகாமையில் இருக்கும் போலீஸ் நிலையங்களில் ஆய்வு செய்து வருகிறார்.

கடந்த வாரம் செங்கல்பட்டு போலீஸ் நிலையத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். நேற்றும் சென்னையில் இருந்து சைக்கிளில் மாமல்லபுரம் சென்று போலீஸ் நிலையத்தை ஆய்வு செய்தார். அங்குள்ள போலீஸ் குடியிருப்புக்கும் சென்று போலீசார் குடும்பத்தினரின் குறைகளை கேட்டறிந்தார்.

கடந்த ஜனவரி மாதம் விபத்தில் சிக்கி இறந்த போலீஸ்காரர் தணிகைவேல் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். தணிகைவேல் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் டி.ஜி.பி.யுடன் சென்றிருந்தனர்.


Next Story