வாடிக்கையாளர்களின் ஆவணங்களை திருடி வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி மோசடி: 2 பேர் கைது


வாடிக்கையாளர்களின் ஆவணங்களை திருடி வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி மோசடி: 2 பேர் கைது
x
தினத்தந்தி 11 Oct 2021 2:50 PM IST (Updated: 11 Oct 2021 2:50 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் ஷோரூம்களில் பொருட்களை தவணை முறையில் வாங்க, வாடிக்கையாளர்களுக்கு தனியார் பைனான்ஸ் நிறுவனம் கடனுதவி கொடுத்து வருகிறது.

இந்தநிலையில் பெருங்குடியில் உள்ள எலக்ட்ரானிக் ஷோரூமில் பணியாற்றும் வீரமணி என்பவர் மூலமாக போலியான ஆதார் எண், வங்கி கணக்கு ஆகியவற்றை கொடுத்து சுமார் ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்து 691 மதிப்புள்ள செல்போன், எல்.இ.டி. டி.வி. ஆகியவற்றை வாங்கி மோசடி செய்ததாக தனியார் பைனான்ஸ் நிறுவனத்தின் உதவி மேலாளர் சீனிவாசன் என்பவர் துரைப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருங்குடியில் உள்ள கடையில் பணியாற்றும் வீரமணி, அவருடைய நண்பர் ஸ்டீபன் ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.

அதில் அவர்கள், வாடிக்கையாளர்களின் ஆவணங்களை திருடி வைத்து கொண்டு பெருங்குடியில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில் நண்பர்கள் மூலமாக அந்த போலி ஆவணங்கள் கொடுத்து வீட்டு உபயோக பொருட்களை வாங்கி மோசடி செய்தது தெரிந்தது. கைதான 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story