மாதந்தோறும் ஓய்வூதியம்
மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்
திருப்பூர்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் கோவை நாதஸ்வர மற்றும் தவில் இசை கலைஞர்கள் நலச்சங்கத்தினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது
கடந்த 1½ ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் கோவில் திருவிழா, திருமணம், சீர் மற்றும் காதணி விழா என அனைத்து விசேஷங்களும் தடைபட்டுள்ளதால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மாதந்தோறும் அனைத்து கலைஞர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
இசைக்கலைஞர்களுக்கு இசைக்கருவிகள் வழங்க வேண்டும். முதியோர்களுக்கு பென்சன் வழங்க வேண்டும். பஸ் பாஸ், விருது போன்றவை வழங்க வேண்டும். அரசு விழாக்களில் வாய்ப்பு வழங்க வேண்டும். வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர். மனு கொடுப்பதற்கு முன்பு மேள, தாளங்கள் இசைத்தனர்.
Related Tags :
Next Story