ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த 2பேர் குண்டர் சட்டத்தில் கைது
ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த 2பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 15 பேர் உள்பட 150 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் பகுதியை ேசர்ந்த மேலும் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் கீழ கோட்டைவாசல் தெருவைச் சேர்ந்த கணபதி மகன் அருணாச்சலம் (வயது 45). இவர் கந்து வட்டி வழக்கில் தட்டப்பாறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதே போன்று, செய்துங்கநல்லூர் மேல தூதுகுழி பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் உய்காட்டன் (23) என்பவரை கொலை முயற்சி வழக்கில் செய்துங்கநல்லூர் போலீசார் கைது செய்தனர். அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், அருணாசலம், உய்க்காட்டான் ஆகிய 2 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.
Related Tags :
Next Story