விபத்துகளை தடுக்க எச்சரிக்கை பலகை
விபத்துகளை தடுக்க எச்சரிக்கை பலகை
காங்கேயம்,
சிவன்மலை அடிவாரம் நான்குரோடு சந்திப்பில் விபத்துகளை தடுக்க எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவன்மலை
காங்கேயம் அருகே திருப்பூர் நெடுஞ்சாலையில் சிவன்மலை அமைந்துள்ளது. இந்த மலை மீதுள்ள சுப்பிரமணியசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். தினசரி ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் இந்த பகுதியில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாகவே இருக்கும். குறிப்பாக காங்கேயம் திருப்பூர் நெடுஞ்சாலையில் அதிக போக்குவரத்து இருந்து வருகிறது. இந்த சாலையில் மலை அடிவாரத்திற்கு செல்ல இரண்டு முக்கிய சாலை சந்திப்புகள் உள்ளன.
அதில் காங்கேயம் திருப்பூர் மெயின் ரொட்டில் சரவணா நகரில் உள்ள நான்கு ரோடு சந்திப்பில் இருந்து ஒரு சாலை பிரிந்து மலை அடிவாரத்திற்கு செல்கிறது. மற்றொன்று இன்னும் சற்று தொலைவில் உள்ள ராமபட்டிணம் செல்லும் பிரிவில் உள்ள நான்கு ரோடு சந்திப்பாகும். மெயின் ரோட்டில் இருந்து மலை அடிவாரத்திற்கு செல்லும் இந்த சாலையின் சந்திப்பில் வளைவு அமைக்கப்ட்டுள்ளது. இதில் நுழைந்து தான் மலை அடிவாரத்திற்கு செல்ல வேண்டும்.
எச்சரிக்கை பலகை
இந்த இரண்டு இடங்களிகாங்கேயம், அக்.12-

இந்த இரண்டு இடங்களிலும் அதிக போக்குவரத்து காரணமாக அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. குறிப்பாக சரவணநகர் சந்திப்பில் மெயின் ரோட்டில் இருந்து மலை அடிவாரத்திற்கு செல்லும் வாகனங்கள் திருப்பூர் அல்லது காங்கேயத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் அதிவேகமாக அந்த இடத்தை கடந்து செல்லும்போது, சாலையின் குறுக்கே செல்லும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி பலர் பலியாகியுள்ளனர். இதேபோல வளைவு இருக்கும் சந்திப்பு பகுதியிலும் ரோட்டை கடக்கும் இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கி கொள்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் உடனடியாக நடவடிக்கை எடுத்து அதிக வேகமாக செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த வேகத்தடையோ அல்லது வேகத்தை கட்டுப்படுத்தும் எச்சரிக்கை அறிவிப்புகளோ வைத்து உயிர் பலிகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
Related Tags :
Next Story