பழனிக்கு ரெயிலில் வந்த 1,282 டன் உரங்கள்


பழனிக்கு  ரெயிலில் வந்த 1,282 டன் உரங்கள்
x
தினத்தந்தி 11 Oct 2021 8:36 PM IST (Updated: 11 Oct 2021 8:36 PM IST)
t-max-icont-min-icon

பழனிக்கு ரெயிலில் 1,282 டன் உரங்கள் வந்தன.

பழனி:
பழனி பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து மக்காச்சோளம், நெல் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யும் பணியை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். இந்நிலையில் பயிர்சாகுபடிக்கு போதிய அளவில் உரங்களை இருப்பு வைக்க வேளாண் துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று தூத்துக்குடியில் இருந்து பழனிக்கு சரக்கு ரெயிலில் யூரியா, டி.ஏ.பி., சூப்பர் பாஸ்பேட் என மொத்தம் 1,282 டன் உரம் கொண்டு வரப்பட்டது.  
இதில் 654 டன் யூரியா, 185 டன் டி.ஏ.பி., 70 டன் சூப்பர் பாஸ்பேட் உரங்கள் பழனி, ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கம், உரக்கடைகளுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது. இதுபோல உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளுக்கு 252 டன் யூரியா, 67 டன் டி.ஏ.பி. 54 டன் சூப்பர் பாஸ்பேட் உரங்கள் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டது.
முன்னதாக உரங்கள் அனுப்பும் பணியை திண்டுக்கல் மாவட்ட உதவி இயக்குனர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) உமா, பழனி வேளாண் உதவி இயக்குனர் மீனாகுமாரி ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், விவசாயிகள் ஆதார் கார்டை பயன்படுத்தி உரங்களை வாங்க வேண்டும். அப்போதுதான் அரசின் மானியங்களை பெற முடியும். அதோடு மண்வள அட்டையை பயன்படுத்தி உரமிட்டால் நல்ல விளைச்சலை பெற முடியும் என்றனர்.



Next Story