3 நாட்கள் தரிசன தடைக்கு பின் பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு


3 நாட்கள் தரிசன தடைக்கு பின் பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு
x
தினத்தந்தி 11 Oct 2021 9:06 PM IST (Updated: 11 Oct 2021 9:06 PM IST)
t-max-icont-min-icon

3 நாட்கள் தடைக்கு பின்னர் சாமி தரிசனம் செய்ய பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை நேற்று அதிகரித்தது.


பழனி:
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை பரவலை தடுக்க வாரத்தின் இறுதி நாட்களில் (வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை) வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அன்றைய தினம் கோவில்களில் பூஜைகள் மட்டும் நடைபெறுகிறது. இதனால் கோவில் நுழைவு பகுதி முன்பு சூடம், விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர்.
அந்த வகையில் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் வாரந்தோறும் 3 நாட்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாத விநாயகர் கோவில் முன்பு பக்தர்கள் வழிபட்டு சென்றனர். 
பக்தர்கள் வருகை அதிகரிப்பு 
இந்நிலையில் 3 நாட்களுக்கு பிறகு நேற்று அதிகாலை முதலே பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்தது. இதனால் கோவில் வெளிப்பிரகாரம், உட்பிரகாரத்தில் உள்ள தரிசன வழிகளில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். 
குறிப்பாக கேரள மாநில பக்தர்கள் மயில் காவடி எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர். அவ்வாறு வந்த பக்தர்கள் கொரோனா தடுப்பு விதிகளான முக கவசம், சமூக இடைவெளியை பின்பற்றி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதில் முக கவசம் அணியாமல் வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் முக கவசம் வழங்கப்பட்டது. 


Next Story