கொடைக்கானல் பகுதியில் 3 மணி நேரம் பலத்த மழை


கொடைக்கானல் பகுதியில் 3 மணி நேரம் பலத்த மழை
x
தினத்தந்தி 11 Oct 2021 9:59 PM IST (Updated: 11 Oct 2021 9:59 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் பகுதியில் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

கொடைக்கானல்:
கொடைக்கானல் பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு பலத்த மழை பெய்ய தொடங்கியது. மாலை 5 மணி வரை மழை நீடித்தது. சுமார் 3 மணி நேரம் நீடித்த மழைக்கு வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி, பியர் சோலா அருவி போன்றவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழையின் காரணமாக நட்சத்திர ஏரி நிரம்பி, தொடர்ந்து அதிக உபரி நீர் வெளியேறுகிறது. மேலும் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர் மழை காரணமாக சுற்றுலா பயணிகள் சுற்றுலா இடங்களை காண முடியாமல் சிரமப்பட்டனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் அனைவரும் பகல் நேரத்திலேயே குளிருக்கு பாதுகாப்பான உடைகளை அணிந்தபடி சென்றனர். 


Next Story