ஆம்பூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி துப்புரவு பெண் பணியாளர் பலி
லாரி சக்கரத்தில் சிக்கி துப்புரவு பெண் பணியாளர் பலி
ஆம்பூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த துத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மனைவி கமலா (வயது 48). இவர் அதே பகுதியில் ஊராட்சி மன்ற தூய்மைப் பணியாளராக வேலைபார்த்து வந்தார். நேற்று துத்திபட்டு தேசிய நெடுஞ்சாலையில் குப்பை வண்டியில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி குப்பை வண்டி மீது மோதியது. இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த கமலா மீது லாரி ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே கமலா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உமராபாத் போலீசார், கமலா உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரியை பறிமுதல் செய்து டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story