கிணற்றில் ஆண் பிணம்


கிணற்றில் ஆண் பிணம்
x
தினத்தந்தி 11 Oct 2021 10:32 PM IST (Updated: 11 Oct 2021 10:32 PM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம் அருகே கிணற்றில் ஆண் பிணம் மிதந்தது.

திருப்புவனம், 

திருப்புவனத்தில் இருந்து பரமக்குடி செல்லும் நான்கு வழி சாலையின் அருகே  விவசாய கிணறு உள்ளது. இதில் ஆண் ஒருவர் பிணமாக மிதந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மானாமதுரை போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் தலைமையில் வந்த போலீசார் கிணற்றை பார்வையிட்டு மானாமதுரை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் குமரேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்து இறந்தவரின் உடலை மீட்டனர். டாக்டர் செந்தில்குமார் தலைமையில் மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். சம்பவம் குறித்து வலையனேந்தல் கிராம நிர்வாக அலுவலர் நாகராஜன் திருப்புவனம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துச்செல்வம் வழக்குபதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story