திருவலம் அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி சாவு
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி சாவு
திருவலம்
திருவலத்தை அடுத்த சேவூர் பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (வயது 50), தொழிலாளி. இவரது மனைவி அம்மு என்கிற லாவண்யா. இவர், தனது 2 பெண் குழந்தைகளுடன் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு மீனாட்சி சுந்தரம் தனது தாய் ராமு அம்மாளுடன் (70) ஓட்டு வீட்டில் தூங்கியுள்ளார்.
நேற்று அதிகாலையில் வீட்டின் மேற்கூரை மற்றும் சுவர் இடிந்து மீனாட்சி சுந்தரம் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி மீனாட்சி சுந்தரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தாயார் ராமு அம்மாள் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவலம் போலீசார் சம்பவ சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story