வாக்கு எண்ணும் மையங்களில் 1,300 போலீசார் பாதுகாப்பு
வாக்கு எண்ணும் மையங்களில் 1,300 போலீசார் பாதுகாப்பு
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6, 9-ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடந்தது. வேலூர், கணியம்பாடி, அணைக்கட்டு, காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியங்களில் பதிவான வாக்குகள் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள அறைகளில் அடுக்கப்பட்டு, அந்த அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (செவ்வாய்கிழமை) நடக்கிறது. இந்த பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என்று 2,957 பேர் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையங்களிலும் தலா ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் 2 இன்ஸ்பெக்டர்கள், 6 சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 1,300 போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதைத்தவிர ஒரு மையத்துக்கு 20 ஊர்க்காவல்படையினர் வீதம் 140 பேர் என்று வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணியில் 1,440 பேர் ஈடுபடுகிறார்கள் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story