மாவட்ட செய்திகள்

சங்கராபுரம் அருகேபஸ் மோதி ஆசிரியர் பலி + "||" + Near Sankarapuram Bus collision kills teacher

சங்கராபுரம் அருகேபஸ் மோதி ஆசிரியர் பலி

சங்கராபுரம் அருகேபஸ் மோதி ஆசிரியர் பலி
சங்கராபுரம் அருகே பஸ் மோதி ஆசிரியர் பலி
சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள அரியலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரேசன் மகன் ராமானுஜம்(வயது 36). சங்கராபுரம் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் சேமபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சங்கராபுரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராமானுஜம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் பலியான ராமானுஜத்துக்கு நிர்மலா(34) என்ற மனைவியும், வைபவ்(4) என்ற மகனும் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நடுநிலை பள்ளிகளில் கணினி, உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தீர்மானம்
நடுநிலை பள்ளிகளில் கணினி, உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியது.
2. ஆசிரியர்களுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில், ஆசிரியர்களுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
3. ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கணவன், மனைவியிடம் ரூ.12 லட்சம் மோசடி தலைமை ஆசிரியர் கைது
ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கணவன், மனைவியிடம் ரூ.12 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
4. ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
5. வெள்ளியணை அரசு பள்ளி ஆசிரியர் தேசிய விருதுக்கு தேர்வு
தகவல் தொடர்பு தொழில் நுட்ப பணிகளில் சிறப்பாக பணியாற்றிய வெள்ளியணை அரசு பள்ளி ஆசிரியர் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவரை கல்வியாளர்கள் பாராட்டினர்.