மாவட்ட செய்திகள்

தொழில் அதிபரிடம் ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டல் + "||" + Case

தொழில் அதிபரிடம் ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டல்

தொழில் அதிபரிடம் ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டல்
தேவகோட்டையில் தொழில் அதிபரிடம் ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டியதாக 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.
தேவகோட்டை,

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்காரம். இவரது மகன் ரவிச்சந்திரன் (வயது51) இவர் சென்னையில் தொழில் அதிபராகவும் இருந்து வருகிறார்.தேவகோட்டை பஸ் ஸ்டாண்ட் வீதியில் ரூ.5 கோடி மதிப்புள்ள சொத்தை 2017-ம் ஆண்டு கிரையம் வாங்கி இருந்தார். பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த சொத்தை சிலர் போலி ஆவணங்கள் தயாரித்து பணம் பறிக்கும் நோக்கில் ரூ.30 லட்சம் கேட்டு ரவிச்சந்திரனை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
அந்த இடத்தில் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிப்பு செய்ததாகவும், அதே இடத்தில் கல்கால்கள் ஊன்றி கொட்டகை அமைத்ததாகவும், கட்டுமானத்திற்கு இறக்கி வைத்திருந்த பொருட்களை திருடிச் சென்றதாகவும், இதை தட்டிக்கேட்ட என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் தேவகோட்டை நகர போலீஸ் நிலையத்தில் ரவிச்சந்திரன் புகார் அளித்தார்.இந்த புகாரின் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் தேவகோட்டை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருதாஊருணி பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் செட்டியார்(65) மற்றும் விவேகானந்தபுரம் மகா என்ற மகாலிங்கம்(46) ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ‘நீட் தேர்வு ரத்து’ என வாக்குறுதி அளிக்க தடை கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு
‘நீட் தேர்வு ரத்து’ என வாக்குறுதி அளிக்க தடை கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
2. பொன். ராதாகிருஷ்ணன் உள்பட பா.ஜனதாவினர் மீது வழக்கு
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம்நடத்திய பொன்.ராதாகிருஷ்ணன் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
3. கலப்பட பனை வெல்லம் விற்பனைக்கு தடை கோரிய வழக்கு
கலப்பட பனை வெல்லம் விற்பனைக்கு தடை கோரிய வழக்கில் அரசு தரப்பில் பதில் அளிக்க நீதிபதிகள் காலஅவகாசம் அளித்து உள்ளனர்.
4. தாயை தாக்கிய மகன் மீது வழக்கு
தாயை தாக்கிய மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
5. தேர்தல் நடத்தை விதிகளை மீறிய 2 வேட்பாளர்கள் மீது வழக்கு
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 2 வேட்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.