அரக்கோணம் அருகே ஆற்றை கடக்க முயன்ற விவசாயி நீரில் மூழ்கி பலி


அரக்கோணம் அருகே ஆற்றை கடக்க முயன்ற விவசாயி நீரில் மூழ்கி பலி
x
தினத்தந்தி 11 Oct 2021 11:34 PM IST (Updated: 11 Oct 2021 11:34 PM IST)
t-max-icont-min-icon

ஆற்றை கடக்க முயன்ற விவசாயி நீரில் மூழ்கி பலி

அரக்கோணம்

அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் அருகே உள்ள ஆனந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வது 60) விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை கேசாவரம் பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டிற்கு திரும்பியபோது அங்குள்ள கொசஸ்தலை ஆற்றை கடக்க முயன்றார். அப்போது கடந்த சில தினங்களாக பெய்த மழையினால் ஆற்றில் வெள்ளம் அதிகமாக இருந்ததை அறியாத மோகன சுந்தரம் ஆற்றில் இறங்கியதாக கூறப்படுகிறது. 

தண்ணீர் அதிகமாக சென்றதால் அவர் தண்ணீரில்  அடித்து செல்லப்பட்டார். தகவல் அறிந்து வந்த அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினர் இரவு முழுவதும் தேடியும் உடல் கிடைக்காத நிலையில் நேற்று காலை மீண்டும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது நீண்ட தேடலுக்கு பிறகு மோகனசுந்தரத்தை பிணமாக மீட்டனர். 

தக்கோலம் போலீசார் சென்று உடலை பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story