நாமக்கல் மாவட்டத்தில் 8 மையங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை
நாமக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் 8 மையங்களில் இன்று எண்ணப்படுகின்றன.
நாமக்கல்:
வாக்கு எண்ணும் பணி
நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள மாவட்ட ஊராட்சிக்குழு 6-வது வார்டு உறுப்பினர், எருமப்பட்டி ஒன்றிய குழு 15-வது வார்டு உறுப்பினர், 3 ஊராட்சி மன்ற தலைவர்கள், 10 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 15 பதவிகளுக்கு கடந்த 9-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் உள்ள 67 ஆயிரத்து 720 வாக்காளர்களில் 56 ஆயிரத்து 870 பேர் வாக்களித்து இருந்தனர்.
வாக்குகள் எண்ணும் பணி மாவட்ட ஊராட்சிக்குழு 6-வது வார்டுக்கு வெண்ணந்தூர் அரசு பள்ளியிலும், இதர பதவிகளுக்கு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் என 8 மையங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த பணியில் சுமார் 40 அரசு ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.
போலீஸ் பாதுகாப்பு
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்குகிறது. ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு காலை 10 மணி அளவில் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதர பதவிகளுக்கு மாலைக்குள் முடிவு வெளியாகும்.வாக்கு எண்ணும் பணியையொட்டி, வாக்கு எண்ணும் மையங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story