நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்பனை-டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு


நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்பனை-டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 11 Oct 2021 6:18 PM GMT (Updated: 11 Oct 2021 6:18 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாமக்கல்:
கொரோனா தடுப்பூசி
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ராஜா டாஸ்மாக் கடை பணியாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளனரா? என்பதை உறுதி செய்த பின்னரே அவர்களுக்கு மதுபானம் வழங்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. இது சம்மந்தமாக அனைத்து கடைகளிலும் அறிவிப்பு ஒட்டப்பட வேண்டும்.
நடவடிக்கை
கடைகளையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கடைகளுக்கு முதலில் வரும் மதுபானங்களை முதலில் விற்பனை செய்ய வேண்டும். இந்த விதிமுறைகளை மீறும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Next Story