திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி மின்வாரிய ஊழியர் கைது

திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி மின்வாரிய ஊழியர் கைது
x
தினத்தந்தி 11 Oct 2021 11:48 PM IST (Updated: 11 Oct 2021 11:48 PM IST)
t-max-icont-min-icon

பாப்பிரெட்டிப்பட்டி அருகே திருமணம் செய்வதாக கூறி உல்லாசமாக இருந்து விட்டு மறுப்பு தெரிவித்ததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பாக மின்வாரிய ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

பொம்மிடி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே திருமணம் செய்வதாக கூறி உல்லாசமாக இருந்து விட்டு மறுப்பு தெரிவித்ததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பாக மின்வாரிய ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
காதல்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பூதநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் முத்துவேல் (வயது 29). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் 24 வயதுடைய ஒரு பெண்ணை கடந்த ஓராண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 
மேலும் அந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி அவர் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இதனிடையே முத்துவேலுக்கு அவரது குடும்பத்தினர் திருமணம் செய்ய பெண் பார்க்க தொடங்கி உள்ளனர். இதனை அறிந்த அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு காதலனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்து விட்டதாக தெரிகிறது. 
மின்வாரிய ஊழியர் கைது
இதனால் மனமுடைந்த அந்த பெண் நேற்று முன்தினம் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் மருத்துவமனைக்கு சென்று அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.  அப்போது அவர், முத்துவேல் தன்னை காதலித்து உல்லாசம் அனுபவித்து வந்ததும், திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்வாரிய ஊழியரை கைது செய்தனர்.

Next Story