மாவு மில்லில் பதுக்கிய ரேஷன் அரிசி பறிமுதல்


மாவு மில்லில் பதுக்கிய ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 12 Oct 2021 12:17 AM IST (Updated: 12 Oct 2021 12:17 AM IST)
t-max-icont-min-icon

மாவு மில்லில் பதுக்கிய ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

நெல்லை:

நெல்லை மாவட்ட வழங்கல் அலுவலர் குழந்தைசாமி தலைமையில், குடிமைப்பொருள் வழங்கல் தனி தாசில்தார் சங்கர் மற்றும் அதிகாரிகள் நெல்லை பழையபேட்டையில் உள்ள சுப்பையா என்பவருக்கு சொந்தமான மாவு மில்லில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு 51 மூட்டைகளில் 2 ஆயிரத்து 100 கிலோ ரேஷன் அரிசி, 100 கிலோ கோதுமை ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் தச்சநல்லூர் சத்திரம் புதுக்குளம் மல்லிகை கீழத்தெரு பகுதியில் கிடந்த 20 மூட்டை ரேஷன் அரிசியை நேற்று முன்தினம் அதிகாரிகள் கைப்பற்றினர்.

Next Story