மாவட்ட செய்திகள்

வாக்கு எண்ணிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் + "||" + Consultative meeting

வாக்கு எண்ணிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம்

வாக்கு எண்ணிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம்
தென்காசியில் வாக்கு எண்ணிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தென்காசி:

தென்காசியில் வாக்கு எண்ணிக்கை தொடர்பான  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டம்

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் குறித்து வட்டார பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

மாவட்ட தேர்தல் பார்வையாளர் பொ.சங்கர் தலைமை தாங்கினார். கலெக்டர் கோபால சுந்தரராஜ் முன்னிலை வகித்தார்.

வாக்கு எண்ணும் மையங்களில் வசதி

வாக்கு எண்ணும் மையங்களில் ஜெனரேட்டர் வசதி, குடிநீர் வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறித்தும், வாக்கு எண்ணிக்கைக்கான மேஜைகள் அமைத்தல், வாக்கு எண்ணிக்கை மையங்களில் சுற்றியும் வாக்கு பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறையிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனவா? என்பது குறித்தும், வாக்கு எண்ணும் மையங்களில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) குருநாதன், துணை இயக்குனர் சுகாதார பணிகள் டாக்டர் அனிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) முத்து இளங்கோவன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.