மாவட்ட செய்திகள்

டேங்கர் லாரி மோதி தொழிலாளி பலி + "||" + truck collision

டேங்கர் லாரி மோதி தொழிலாளி பலி

டேங்கர் லாரி மோதி தொழிலாளி பலி
டேங்கர் லாரி மோதி தொழிலாளி பலியானார். மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தோகைமலை, 
டேங்கர் லாரி
திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா அன்ன சமுத்திரத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 52), கூலிதொழிலாளி. இவர் தோகைமலை அருகே உள்ள தேசிய மங்களத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
இதேபோல் கரூரில் டீசல் ஏற்றிய டேங்கர் லாரி மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. மணப்பாறை- குளித்தலை மெயின் ரோட்டில் தெற்கு பள்ளம் என்ற இடத்தில் வந்தபோது டேங்கர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
டிரைவருக்கு வலைவீச்சு
இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதில் பீதியடைந்த டிரைவர் லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.