மின்அடுப்பில் மறைத்து ரூ.20¾ லட்சம் தங்கம் கடத்தி வந்த வாலிபர் கைது

மின்அடுப்பில் மறைத்து ரூ.20¾ லட்சம் தங்கம் கடத்தி வந்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 Oct 2021 12:58 AM IST (Updated: 12 Oct 2021 12:58 AM IST)
t-max-icont-min-icon

மின்அடுப்பில் மறைத்து ரூ.20¾ லட்சம் தங்கம் கடத்தி வந்த வாலிபர் கைது

செம்பட்டு, அக்.12-
திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இதனையடுத்து இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, திருவாரூரைச் சேர்ந்த சரவணக்குமார் (வயது 24) என்பவர் மின்சார அடுப்பு கொண்டு வந்தார்.
சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் அதனை சோதனை செய்தபோது, அந்த அடுப்பின் உள்ளே மறைத்து வைத்து ரூ.20 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அவரை கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

Next Story