சவுதியில் உயிரிழந்த மகனின் உடலை தமிழகம் கொண்டுவர வேண்டும்-கலெக்டர் அலுவலகத்தில் தாய் கண்ணீர் மனு

சவுதியில் உயிரிழந்த மகனின் உடலை தமிழகம் கொண்டுவர வேண்டும்-கலெக்டர் அலுவலகத்தில் தாய் கண்ணீர் மனு
x
தினத்தந்தி 12 Oct 2021 1:16 AM IST (Updated: 12 Oct 2021 1:16 AM IST)
t-max-icont-min-icon

சவுதியில் உயிரிழந்த மகனின் உடலை தமிழகம் கொண்டுவர வேண்டும்-கலெக்டர் அலுவலகத்தில் தாய் கண்ணீர் மனு

திருச்சி, அக்.12-
 துறையூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணாமணி. இவருடைய மகன் ராஜா (வயது 29). இவர் சவுதி அரேபியாவிற்கு 2 வருட ஒப்பந்த அடிப்படையில் கடந்த வருடம் வேலைக்கு சென்றார். . இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் அங்கு நடந்த சாலை விபத்தில் ராஜா இறந்தார். இவரது உடலை தமிழகத்துக்கு அனுப்ப, அவர் வேலைபார்த்த நிறுவனத்தில் வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து ராஜாவின் தாயார் கண்ணாமணி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க துறைரீதியாக நடவடிக்கை எடுத்து எனது மகன் உடலை தமிழகம் கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கலெக்டர் சிவராசுவிடம் மனு அளித்தார்.

Related Tags :
Next Story