தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 11 Oct 2021 7:58 PM GMT (Updated: 11 Oct 2021 7:58 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி
கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா கழுகூர் கிராமம் மேலக்கம்பேஸ்வரம் பகுதியில் தெருவிளக்குகளை எரிய வைக்கும் மின்சாதன பெட்டி பழுதடைந்து இருந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள தெரு விளக்குகள் அடிக்கடி பழுதடைவதுடன், மழை பெய்யும் போது பாதுகாப்பற்ற நிலையில் இருந்தது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, அதிகாரிகள் அந்த மின்சாதன பெட்டியை சரிசெய்தனர். எனவே செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
பொதுமக்கள், மேலக்கம்பேஸ்வரம், கரூர்.
திருச்சி மாவட்டம், மேற்கு தொகுதி 52-வது வார்டு 9-வது குறுக்கு தெருவில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்யப்பட்டது. ஆனால் அதன் கழிவுகள்  அகற்றாமல் சாலையோரம் கொட்டப்பட்டது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, நகராட்சி ஊழியர்கள் அந்த கழிவுகளை அகற்றினர். எனவே செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
பொதுமக்கள், திருச்சி.
அபாயகரமான நீர்தேக்க தொட்டி
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா மருவத்தூர் தெற்கு தெருவில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி மிகவும் பழுதடைந்து அபாயகரமான நிலையில் உள்ளது. மேலும், கான்கிரீட் தூண்கள் உடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. எனவே அசம்பாவித சம்பவம் நடைபெறும் முன்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதனை இடித்துவிட்டு புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டியை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராயப்பன், மருவத்தூர், பெரம்பலூர்.
இருளில் மூழ்கிய தெருக்கள்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் முத்துசேர்வாமடம் ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கடந்த ஒரு ஆண்டாக தெரு விளக்குகள் எரியவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள தெருக்கள் இருளில் மூழ்கி கிடக்கிறது. இரவு நேரங்களில் திருடர்கள் பயமும், பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ பூச்சிகளின் தொல்லையும் அதிகமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் தெருவிளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவிச்சந்திரன், அரியலூர்.
சாலையில் கொட்டப்படும் கட்டிடக்கழிவுகள்
திருச்சி மாநகராட்சி 62-வது வார்டு பாத்திமாபுரம் சாலையில் இரவு நேரங்களில் மர்ம ஆசாமிகள் கட்டிடக்கழிவுகள் கொட்டி செல்கிறார்கள். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கட்டிடக்கழிவுகளை உடனடியாக அகற்றுவதுடன், சாலையில் கட்டிட கழிவுகளை கொட்டி செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்துல் ரஹ்மான், திருச்சி.
ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்படுமா?
தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சிக்கு ஒருங்கிணைந்த பஸ் நிலையம் இல்லை. பண்டிகை காலங்களில் தற்காலிக பஸ் நிறுத்தம் அமைத்து கூட்ட நெரிசலை போக்குவரத்து துறை அதிகாரிகள் சரி செய்து வருகிறார்கள். இதனால் வெளியூரிலிருந்து வரும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். எனவே அரசு அறிவித்த ஒருங்கிணைந்த பஸ் நிலைய பணிகளை உடனடியாக தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செய்யது இஸ்மாயீல், கீரனூர், புதுக்கோட்டை.
வாகன ஓட்டிகள் அவதி
திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. மேலும் கீரனூர் நகரில் சேகரிக்கப்படும் இறைச்சி கழிவுகள் இரவு நேரங்களில் இப்பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முட்புதர்களை வெட்டி அகற்றுவதுடன், இறைச்சி கழிவுகளை சாலையோரம் வீசி செல்வோரை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஞானசேகரன், புதுக்கோட்டை.
சுகாதார சீர்கேடு
புதுக்கோட்டை மாவட்டம் காமராஜபுரம் 20-ம் வீதியில் உள்ள சாக்கடையில் குப்பைகள் கொட்டப்படுவதால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாக்கடையில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஷாகுல்ஹமிது, புதுக்கோட்டை.
மின்கம்பம் பழுது
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, விருதாபட்டி கிராமம், செரலபட்டியில் உள்ள  மின்கம்பம் கடந்த 6 மாதங்களாக பழுதாகி உள்ளன. இதனால் அப்பகுதி இருளில் மூழ்கி கிடக்கிறது. மேலும் மின் கம்பிகள் சிறுவர்கள் கை தொடும் அளவிற்கு உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உயிரிழப்பு ஏற்படும் முன்பு இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனந்தராஜ், புதுக்கோட்டை

Next Story