இன்று உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை


இன்று உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை
x
தினத்தந்தி 12 Oct 2021 2:11 AM IST (Updated: 12 Oct 2021 2:11 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது.

அரியலூர்:

வாக்கு எண்ணிக்கை
அரியலூர் மாவட்டத்தில் காலியாக இருந்த ஓலையூர், நாயகனைப்பிரியாள், மணகெதி ஆகிய 3 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கும், ஒட்டக்கோவில் 6-வது வார்டு, வெற்றியூர் 6-வது வார்டு, கோவிலூர் 1-வது வார்டு, தளவாய் 9-வது வார்டு, சிறுகடம்பூர் 3-வது வார்டு, ஜெ.தத்தனூர் 5-வது வார்டு, இடையக்குறிச்சி 2-வது வார்டு, இலையூர் 9-வது வார்டு, அம்பாபூர் 8-வது வார்டு ஆகிய ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்களுக்கும் நடந்த தற்செயல் தேர்தலில் மொத்தம் 78.68 சதவீத வாக்குகள் பதிவானது.
இதையடுத்து வாக்குகள் அடங்கிய பெட்டிகள், வாக்கு எண்ணும் மையமான அந்தந்த ஒன்றிய அலுவலங்களில் உள்ள அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதையடுத்து வாக்குகள் இன்று காலை 8 முதல் எண்ணப்படுகிறது. இந்த பணியில் 27 அரசு அலுவலர்கள் ஈடுபடவுள்ளனர். ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் ரமணசரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தா.பழூர்
தா.பழூர் ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது. 3 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. அவர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஒன்றிய அலுவலக வளாகத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் தடுப்பு ஏற்படுத்தி வேட்பாளர்களின் ஆதரவாளர்களை தடுத்து நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜெயங்கொண்டம் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் தலைமையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Next Story