மாவட்ட செய்திகள்

விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் + "||" + Seizure of plastic items kept for sale

விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதியில் வணிக நிறுவனங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராஜ் மற்றும் குணசேகரன் தலைமையிலான ஊரக வளர்ச்சி துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட 50 கிலோவுக்கு மேற்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ேமலும் விதிமுறைகளை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 6 வணிக நிறுவனங்களுக்கு ரூ.1,500 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோன்று காரைக்குறிச்சி கடைவீதியில் வணிக நிறுவனங்களில் சோதனை நடத்தியதில், பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த 7 வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ.200 வீதம் ரூ.1,400 அபராதம் விதிக்கப்பட்டு, அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டது. இந்த ஆய்வில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், செந்தில்குமார், ஊராட்சி செயலாளர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கைக்கு கடத்த முயன்ற 2,400 கிலோ மஞ்சள் பறிமுதல்
இலங்கைக்கு கடத்த முயன்ற 2 ஆயிரத்து 400 கிலோ மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்
தளவாய்புரம் அருகே நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
3. மதுரை விமானநிலையத்தில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல்
மதுரை விமான நிலையத்தில் ஒரு கிலோ தங்கம் கடத்தி வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த 2 வாலிபர்களை சுங்கத்துறையினர் பிடித்தனர்
4. உரிய ஆவணம் இன்றி காரில் கொண்டு வந்த ரூ.2½ லட்சம் பறிமுதல்
சின்னசேலம் அருகே உரிய ஆவணம் இன்றி காரில் கொண்டு வந்த ரூ.2½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
5. ஆந்திர பிரதேசம்: 1,710 கிலோ போதை பொருள் பறிமுதல்
ஆந்திர பிரதேசத்தில் 1,710 கிலோ எடை கொண்ட போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.