மாவட்ட செய்திகள்

பெண்ணை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கிய அண்ணன்- தம்பி கைது + "||" + Brother arrested for preventing woman from working

பெண்ணை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கிய அண்ணன்- தம்பி கைது

பெண்ணை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கிய அண்ணன்- தம்பி கைது
பெண்ணை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கிய அண்ணன்- தம்பி கைது செய்யப்பட்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுநடுவலூர் ஊராட்சியில் நேற்று முன்தினம் நடந்த மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில், தடுப்பூசி செலுத்தாதவர்களை வீடு, வீடாக சென்று கணக்கெடுத்து, தடுப்பூசி செலுத்திக்கொள்ள முகாமிற்கு அழைத்து வரும் களப்பணியில் பெண் பணியாளர் ஒருவர் ஈடுபட்டார். அப்போது புதுநடுவலூரை சேர்ந்த மாரிமுத்துவின் மகன் ரஞ்சித் (வயது 26), அவரது தம்பி பிரதீப்(24) ஆகிய 2 பேர் சேர்ந்து அந்த பெண் பணியாளரை பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தி, தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதோடு, கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக அந்த பெண் பணியாளர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித், பிரதீப் ஆகியோரை கைது செய்தனர். இது போல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மற்றும் அரசு பணிகளில் ஈடுபடுபவர்களை பணி செய்ய விடாமல் தடுத்தால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மது விற்றவர் கைது
மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
2. கஞ்சா விற்ற 3 பேர் கைது
கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. இலங்கையை சேர்ந்தவர்கள் கைதான விவகாரம்:மதுரையில் மேலும் ஒரு இடைத்தரகர் கைது
இலங்கையை சேர்ந்தவர்கள் கைதான விவகாரத்தில் மதுரையில் மேலும் ஒரு இடைத்தரகர் கைது செய்யப்பட்டார்.
4. விதிமீறி ஆலையில் பட்டாசு தயாரிப்பு; போர்மேன் கைது
விதிமீறி ஆலையில் பட்டாசு தயாரிப்பு; போர்மேன் கைது
5. சங்கராபுரம் அருகே நடந்த கொலை வழக்கில் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது
சங்கராபுரம் அருகே நடந்த கொலை வழக்கில் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது