சேலம் மாவட்டத்தில் 52 பேருக்கு கொரோனா-மேலும் ஒருவர் பலி


சேலம் மாவட்டத்தில் 52 பேருக்கு கொரோனா-மேலும் ஒருவர் பலி
x
தினத்தந்தி 11 Oct 2021 9:50 PM GMT (Updated: 11 Oct 2021 9:50 PM GMT)

சேலம் மாவட்டத்தில் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மேலும் ஒருவர் பலியானார்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மேலும் ஒருவர் பலியானார்.
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 53 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 52 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 12 பேரும், சேலம் ஒன்றிய பகுதிகளில் 25 பேரும், ஆத்தூர் பகுதிகளில் 3 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் சேலம் மாவட்டத்துக்கு ஈரோட்டில் இருந்து வந்த 4 பேர், நாமக்கல், கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்த தலா 3 பேர், தர்மபுரியில் இருந்து வந்த 2 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மேலும் ஒருவர் பலி
இவர்கள் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 98 ஆயிரத்து 711 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 63 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் வீடு திரும்பினர். தொடர்ந்து 576 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
சேலத்தை சேர்ந்த 70 வயதுடைய முதியவர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இவர் உள்பட கொரோனாவுக்கு 1,672 பேர் உயிரிழந்துள்ளனர்.

Next Story