திருமணம் செய்வதாக கூறி சிறுமி பலாத்காரம்:தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை-சேலம் கோர்ட்டு தீர்ப்பு

திருமணம் செய்வதாக கூறி சிறுமி பலாத்காரம்:தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை-சேலம் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 11 Oct 2021 10:10 PM GMT (Updated: 11 Oct 2021 10:10 PM GMT)

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

சேலம்:
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
கூலித்தொழிலாளி
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள செட்டிமாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 22), கூலித்தொழிலாளி. இவருக்கும் 14 வயதுடைய சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 18-ந் தேதி சக்திவேல், அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார்.
பின்னர் அந்த சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் எடப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் சக்திவேலை கைது செய்தனர்.
10 ஆண்டுகள் சிறை
இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக சக்திவேலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு அளித்தார்.

Next Story