மாவட்ட செய்திகள்

குமரியில் 124 இடங்களில் தடுப்பூசி முகாம் + "||" + Vaccination camp at 124 places in Kumari

குமரியில் 124 இடங்களில் தடுப்பூசி முகாம்

குமரியில் 124 இடங்களில் தடுப்பூசி முகாம்
குமரியில் 124 இடங்களில் தடுப்பூசி முகாம்
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) 124 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. மாவட்டத்தில் இதுவரை முதல் கட்ட தடுப்பூசியை 10 லட்சத்து 29 ஆயிரத்து 967 பேருக்கும், 2-ம் கட்ட தடுப்பூசியை 3 லட்சத்து 33 ஆயிரத்து 250 பேரும் செலுத்திக் கொண்டனர். முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 68 பேருக்கு நேற்று அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.