கொசஸ்தலை ஆற்றில் புனரமைப்பு பணிகளை காலக்கெடுவுக்குள் முடிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.4½ லட்சம் அபராதம்
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கொசஸ்தலை ஆற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் நீர்நிலைகள் புனரமைப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கொசஸ்தலை ஆற்றில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டத்தில் இதுவரை நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவு செய்யாத 4 ஒப்பந்ததாரர்களுக்கு காரணம் கேட்டு குறிப்பாணை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் 5 ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.1¾ லட்சம் அபராதமும், 47 நீர்நிலைகளை புனரமைத்து சீரமைக்கும் பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்காத 4 ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.2¼ லட்சம் அபராதமும், மாம்பலம் கால்வாய் கட்டுமான பணிகளில் காலக்கெடுவுக்குள் முடிக்காத ஒரு ஒப்பந்ததாரருக்கு ரூ.50 ஆயிரமும் அபராதம் விதித்து கமிஷனர் உத்தரவிட்டார்.
இதில் துணை கமிஷனர் எம்.எஸ்.பிரசாந்த், தலைமை என்ஜினீயர் எஸ்.ராஜேந்திரன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story