மோசமான வானிலையால் திருச்சி விமானம் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தது


மோசமான வானிலையால் திருச்சி விமானம் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தது
x
தினத்தந்தி 12 Oct 2021 9:52 AM IST (Updated: 12 Oct 2021 9:52 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து திருச்சிக்கு நேற்று முன்தினம் இரவு 8.15 மணிக்கு 48 பயணிகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது.

இரவு 9 மணிக்கு திருச்சி சென்ற விமானம், அங்கு மோசமான வானிலை காரணமாக தரை இறங்க முடியாமல் வானில் வட்டமிட்டது. சிறிது நேரம் வானில் வட்டமிட்ட விமானம், அதன்பிறகும் தரை இறங்க முடியாததால் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தது. அந்த விமானம் இரவு 10.40 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியது.

திருச்சியில் வானிலை சீரானதும் இரவு 11.40 மணிக்கு அந்த விமானம் மீண்டும் திருச்சிக்கு புறப்பட்டு சென்றது.

Next Story