கெருகம்பாக்கம் ஊராட்சியில் மோதலில் ஈடுபட்ட தி.மு.க.-அ.ம.மு.க.வினர் 30 பேர் மீது வழக்கு


கெருகம்பாக்கம் ஊராட்சியில் மோதலில் ஈடுபட்ட தி.மு.க.-அ.ம.மு.க.வினர் 30 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 12 Oct 2021 1:16 PM IST (Updated: 12 Oct 2021 1:16 PM IST)
t-max-icont-min-icon

கெருகம்பாக்கம் ஊராட்சியில் மோதலில் ஈடுபட்ட தி.மு.க.-அ.ம.மு.க.வினர் 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கெருகம்பாக்கம் ஊராட்சியில் கடந்த 9-ந்தேதி 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவின்போது இந்திரா நகர் வாக்குச்சாவடியில் தி.மு.க. மற்றும் அ.ம.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் முகத்தில் மிளகாய் பொடி வீசியும், கல்லாலும் மாறி, மாறி தாக்கி கொண்டனர். இதில் இருதரப்பிலும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் தனித்தனியாக மாங்காடு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் தி.மு.க.வைச் சேர்ந்த காசி மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்பட 25 பேர் மீதும், அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் முத்தையா உள்பட 5 பேர் மீதும் என இருதரப்பையும் சேர்ந்த மொத்தம் 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story