நிழற்குடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
தளி அருகே தேவனூர்புதூர் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தளி
தளி அருகே தேவனூர்புதூர் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஆனைமலை-உடுமலை பிரதான சாலையில் அமைந்துள்ளது தேவனூர்புதூர்.திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட எல்லைப்பகுதியாகவும் இந்த ஊராட்சி உள்ளது.உடுமலையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த பகுதியின் வழியாக ஆனைமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது.இதனால் ஏராளமான பொதுமக்கள் தேவனூர்புதூர் சந்திப்புக்கு வந்து பொள்ளாச்சி, ஆனைமலை, பழனி, உடுமலை போன்ற பகுதிகளுக்கும் அருகில் உள்ள ஊராட்சிகளுக்கும் சென்று வருகின்றனர். இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாததால் பொதுமக்கள் இயற்கைச் சீற்றங்களால் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,
சுற்றுப்புற கிராமங்களுக்கு இந்த பகுதி முக்கியமான சந்திப்பாக உள்ளதால் ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர். ஆனால் பயணிகள் நிழற்குடை இல்லாததால் மணிக்கணக்கில் கால் கடுக்க நிற்க வேண்டி உள்ளது.மேலும் வெயில், மழை போன்ற இயற்கை சீற்றங்களும் பொதுமக்களை தாக்கி வருகிறது.சாலையின் ஓரங்களில் நின்றுள்ள பொதுமக்கள் மீது அந்த வழியாக வருகின்ற வாகனங்கள் நிலைதடுமாறி மோதுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் பஸ்சுக்காக காத்துக்கொண்டுள்ள பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.எனவே பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்டு தேவனூர்புதூர் சந்திப்பில் பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story