மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் பலசரக்கு கடையில் ரூ22 ஆயிரம் திருடடு + "||" + rs22 thousands stolen from grocery store in thoothukudi

தூத்துக்குடியில் பலசரக்கு கடையில் ரூ22 ஆயிரம் திருடடு

தூத்துக்குடியில் பலசரக்கு கடையில் ரூ22 ஆயிரம் திருடடு
தூத்துக்குடியில் பலசரக்கு கடையில் ரூ22 ஆயிரம் திருடப்பட்டது
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 39). இவர் தாளமுத்துநகர் பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு கடையை பூட்டி விட்டு சென்றாராம். நேற்று முன்தினம் காலையில் கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துசாமி கடைக்குள் சென்று பார்த்து உள்ளார். அங்கு இருந்த பீடி, சிகரெட் உள்ளிட்ட ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.