மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் கட்டிட ஒப்பந்ததாரரிடம் ரூ22 ஆயிரம் வழிப்பறி + "||" + drainage rs22 thousand from a building contractor in thoothukudi

தூத்துக்குடியில் கட்டிட ஒப்பந்ததாரரிடம் ரூ22 ஆயிரம் வழிப்பறி

தூத்துக்குடியில் கட்டிட ஒப்பந்ததாரரிடம் ரூ22 ஆயிரம் வழிப்பறி
தூத்துக்குடியில் கட்டிட ஒப்பந்ததாரரிடம் ரூ22 ஆயிரம் வழிப்பறி செய்யப்பட்டது
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே கட்டிட ஒப்பந்தக்காரரிடம் பணம் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஒப்பந்தக்காரர்
கன்னியாகுமரி மாவட்டம் தலையன்கோனத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). இவர் கட்டிட ஒப்பந்தக்காரராக தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் தூத்துக்குடி-பாளையங்கோட்டை ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தாராம். அவர் வாகைகுளம் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் பழுதானது. இதனால் அவர் மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு சென்றாராம்.
பணம் பறிப்பு
அப்போது அங்கு 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து உள்ளனர். அவர்கள் மோட்டார் சைக்கிளை பழுது நீக்கித்தருவதாக கூறி சுரேசை அழைத்து சென்று உள்ளனர். அங்கு காட்டுப்பகுதியில் சென்ற போது, சுரேசிடம் இருந்த ரூ.19 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் ரூ.24 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டார்களாம்.
இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.