முருநெல்லிகோட்டையில் வருமுன் காப்போம் திட்டத்தில் மருத்துவ முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


முருநெல்லிகோட்டையில்  வருமுன் காப்போம் திட்டத்தில் மருத்துவ முகாம்  கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 12 Oct 2021 9:15 PM IST (Updated: 12 Oct 2021 9:15 PM IST)
t-max-icont-min-icon

முருநெல்லிகோட்டையில் நடந்த வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை கலெக்டர் விசாகன் தொடங்கி வைத்தார்.

கன்னிவாடி:
ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள முருநெல்லிகோட்டை நால்ரோட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ‘வருமுன் காப்போம்’ திட்டத்தில் மருத்துவ முகாம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பி.கே.சிவகுருசாமி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராஜராஜேஸ்வரி, முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சத்தியமூர்த்தி, வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமிற்கு வந்த அனைவரையும் முருநெல்லிகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சின்னு என்ற முருகன் வரவேற்றார். முகாமில் கலெக்டர் பேசும்போது, கொரோனா தடுப்பூசியை இந்தப் பகுதியில் 90 சதவீதம் பேர் போட்டு கொண்டதாக டாக்டர்கள் கூறினார்கள். இந்த செய்தி எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இன்னும் இருக்கும் 10 சதவீதம் பேரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார். பின்னர் கலெக்டர், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். நிகழ்ச்சிகளை மாவட்ட செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான் தொகுத்து வழங்கினார். 
முகாமில் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் வரதராஜன், வட்டார மருத்துவ அலுவலர்கள் செல்லமுத்து, கண்ணன், சுகாதார ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் காசி செல்வி, தாசில்தார் வடிவேல் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயலட்சுமி, வேதா, முருநெல்லிகோட்டை ஊராட்சி துணைத்தலைவர் செந்தில்குமார், முன்னாள் தி.மு.க. ஒன்றிய துணைச்செயலாளர் கமலக்கண்ணன், மாவட்ட கவுன்சிலர் சுப்புலட்சுமி, கோவில் கண்ணன், கிளை செயலாளர் உதயகுமார், கவுன்சிலர்கள் திருப்பதி, காளீஸ்வரி மலைச்சாமி, குருநாதாநாயக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி, ஊராட்சி செயலாளர்கள் விஜயகுமார், கர்ணன், தி.மு.க. ஒன்றிய அவைத்தலைவர் வெள்ளையன், புதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அருணாச்சலம் மற்றும் தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.


Next Story