மாவட்ட செய்திகள்

அரசு ஊழியர் உள்பட 2 பேர் தற்கொலை + "||" + Two people including a government employee committed suicide

அரசு ஊழியர் உள்பட 2 பேர் தற்கொலை

அரசு ஊழியர் உள்பட 2 பேர் தற்கொலை
தனித்தனி சம்பவத்தில் அரசு ஊழியர் உள்பட 2 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
திருக்கனூர், அக்.
தனித்தனி சம்பவத்தில் அரசு ஊழியர் உள்பட 2 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
அரசு ஊழியர்
 திருக்கனூர் அருகே உள்ள கொ.மணவெளி புதுநகரை சேர்ந்தவர் சவுந்திரராஜன் (வயது 56).    அரசு  சார்பு நிறுவனமான    கான்பெட் பெட் ரோல் பங்க்கில் வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால், குடும்பம் நடத்த   முடியாமல்  சவுந்திர ராஜன் கஷ்டப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று எலி பேஸ்ட் தின்று தற்கொலைக்கு முயன்றார். இதை அறிந்த அவரது குடும்பத்தினர், சவுந்திரராஜனை உடனடியாக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில் பலனின்றி சவுந்திரராஜன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு        செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமணமாகாத ஏக்கத்தில்...
வில்லியனூரை அடுத்த பெருங்களூரை சேர்ந்த ராமமூர்த்தி மகன் தெய்வநாயகம் (வயது 28). ஆச்சார்யபுரத்தில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை செய்து வந்தார். 
வாரம் ஒருமுறை வீட்டுக்கு செல்லும் அவர், கடந்த 3-ந் தேதிக்கு பிறகு வீட்டுக்கு செல்லவில்லை. இதனால் குடும்பத்தினர், பல இடங்களில் தேடியும்  அவரை பற்றிய விவரம் தெரியவில்லை.
இந்தநிலையில் நேற்று காலை கரிக்கலாம்பாக்கம் -பாகூர் சாலையில் கீழ்குமாரமங்கலம் சாராயக்கடை அருகே தெய்வநாயகம் இறந்து கிடந்ததை அறிந்து அவரது குடும்பத்தினர் அங்கு சென்று உடலை பார்த்து கதறி அழுதனர்.   இதுகுறித்த    புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். திருமணமாகாத ஏக்கத்தில் சாராயத்தில் விஷம் கலந்து குடித்து தெய்வநாயகம் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.