மாவட்ட செய்திகள்

சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு + "||" + high court judges inspect in court

சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு

சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு
சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.
 சீர்காழி;
சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு செய்தனர். 
ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் செயல்படுகிறது. இந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், இளங்கோவன் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.  தொடர்ந்து வழக்குகள் குறித்த ஆவணங்கள், கட்டிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பார்கவி, மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜ் ஆகியோரிடம் கேட்டறிந்தனர். 
பின்னர் கணினி அறை, காப்பக அறை, நீதிமன்ற வளாகம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் மாவட்டநீதிபதி கிங்சிலி கிரிஸ்டோபர், வக்கீல்கள்  சங்க தலைவர் வெங்கடேசன், செயலாளர் ராஜேஷ், மூத்த வக்கீல்கள்  உள்ளிட்ட பலர் இருந்தனர். 
பாதுகாப்பு பணி
முன்னதாக வக்கீல்கள் சங்கம் சார்பில் ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நீதிபதிகள் வருகையை முன்னிட்டு சீர்காழி நகர் பகுதி முழுவதும் சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் உள்ளிட்ட ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.