மாவட்ட செய்திகள்

கடைவீதியில் தேங்கும் மழைநீர் + "||" + complaint box

கடைவீதியில் தேங்கும் மழைநீர்

கடைவீதியில் தேங்கும் மழைநீர்
கடைவீதியில் தேங்கும் மழைநீர்
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு கடை வீதி பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கின்றன.இதனால் கடை வீதிக்கு வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி தேங்கிக் கிடக்கும் மழை நீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அந்தப் பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், கடைவீதி பகுதி முழுவதும் மழைநீர் தேங்குவதால் வாகனங்களில் வருபவர்கள் அடிக்கடி விபத்துக்களில் சிக்கிக் கொள்கின்றனர். எனவே மக்கள் நலன் கருதி மணல்மேடு கடைவீதி பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க மழைநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும்.

நாகப்பட்டினம் - காரைக்கால் சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான இருசக்கர கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த நிலையில் நாகப்பட்டினம்-காரைக்கால் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை குழிகள் சேதமடைந்துள்ளன.குறிப்பாக பாதாள சாக்கடை குழிகளின் மூடிகள் சாலையின் நடுவே ஆபத்தான பள்ளங்களை ஏற்படுத்தியுள்ளன.இதனால் வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.அதுமட்டுமின்றி மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவதால் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் வண்ணம் உள்ளன. எனவே உயிர்பலி எதுவும் ஏற்படும் முன்பு நாகப்பட்டினம்-காரைக்கால் சாலையில் உள்ள ஆபத்தான பள்ளங்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் 

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் போலீஸ் நிலையம் காவலர் குடியிருப்பு அருகே உள்ள சாலையில் வேகத்தடை அமைக்கப்படவில்லை.மேலும், குடியிருப்பு அருகே எஸ் வடிவ சாலை வளைவும் உள்ளது. இந்த நிலையில் அந்த பகுதியில் வேகத்தடை இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர்.அதுமட்டுமின்றி எஸ் வடிவ வளைவில் வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றனர்.இதனால் அந்த பகுதி மக்கள் சாலையை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயிர்பலி எதுவும் ஏற்படும் முன்பு எஸ் வடிவ சாலை வளைவில் எச்சரிக்கை பலகை வைக்கவும், வேகத்தடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் உள்ள ராயல்சிட்டி ஆர்ச் அருகே மின்கம்பம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இந்த மின் கம்பம் தற்போது பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது.மின் கம்பத்தின் மேல் பகுதியில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் காற்று அடித்தால் கூட மின்கம்பம் முறிந்து கீழே விழும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மின்கம்பம் இருக்கும் பகுதியை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர்.எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.