கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 55 ஒன்றிய வார்டுகளில் வெற்றி பெற்று தி மு க முன்னிலை


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 55 ஒன்றிய வார்டுகளில் வெற்றி பெற்று தி மு க முன்னிலை
x
தினத்தந்தி 12 Oct 2021 6:20 PM GMT (Updated: 12 Oct 2021 6:20 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 55 ஒன்றிய வார்டுகளில் வெற்றி பெற்று தி மு க முன்னிலை

கள்ளக்குறிச்சி

177 பதவிகளுக்கு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 180 ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் அதிகபட்சமாக ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 25 வார்டுகளும், குறைந்த பட்சமாக கல்வராயன் மலை ஒன்றியத்தில் 7 வார்டுகளும் உள்ளன. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 180 ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் தியாகதுருகம் ஒன்றியத்தில் 2 வார்டுகளிலும், கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் ஒரு வார்டிலும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து மீதமுள்ள 177 பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் 754 பேர் போட்டியிட்டனர். 

கள்ளக்குறிச்சி

வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கினாலும் முடிவுகளை அறிவிக்க காலதாமதம் ஆனது. நேற்று இரவு 8 மணி நிலவரப்படி கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் தி.மு.க. 6 வார்டுகளிலும், அ.தி.மு.க. மற்றும் சுயேச்சை தலா ஒரு வார்டுகளிலும் வெற்றிபெற்றனர். 4 வார்டுகளில் தி.மு.க. முன்னிலையில் இருந்து வருகிறது. திருக்கோவிலூர் ஒன்றியத்தில் 20 வார்டுகளில் தி.மு.க. முன்னிலையில் இருந்து வருகிறது. மேலும் அ.தி.மு.க. 2 வார்டுகளிலும், சுயேச்சை ஒரு வார்டிலும், திருநாவலூர் ஒன்றியத்தில் தி.மு.க. 1 வார்டிலும், இந்திய கம்யூனிஸ்டு ஒரு வார்டிலும் வெற்றிபெற்றது. 4 இடங்களில் தி.மு.க. முன்னிலையில் இருந்து வருகிறது.

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் தி.மு.க. 5 வார்டுகளிலும், அ.தி.மு.க. ஒரு வார்டிலும், ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் தி.மு.க. 10 வார்டுகளிலும், அ.தி.மு.க. ஒரு வார்டிலும், சின்னசேலம் ஒன்றியத்தில் தி.மு.க. 5 வார்டுகளிலும் வெற்றிபெற்றது. சங்கராபுரம் ஒன்றியத்தில் தி.மு.க. 13 வார்டுகளிலும், அ.தி.மு.க.மற்றும் இந்திய கம்யூனிஸ்டு, சுயேச்சை தலா ஒரு வார்டிலும், தியாகதுருகம் ஒன்றியத்தில் தி.மு.க. 12 வார்டுகளிலும், அ.தி.மு.க. 2 வார்டுகளிலும், கல்வராயன்மலை ஒன்றியத்தில் தி.மு.க. 3 வார்டுகளிலும் வெற்றிபெற்றது தெரியவந்துள்ளது.

Next Story