12 ஊராட்சி ஒன்றியங்களை தி.மு.க. கைப்பற்றுகிறது


12 ஊராட்சி ஒன்றியங்களை தி.மு.க. கைப்பற்றுகிறது
x
தினத்தந்தி 12 Oct 2021 11:56 PM IST (Updated: 12 Oct 2021 11:56 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களையும் தி.மு.க. கைப்பற்றுகிறது. வானூரில் மட்டும் இழுபறி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 28 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 293 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 688 கிராம ஊராட்சி தலைவர், 5,088 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தமுள்ள 6,097 பதவியிடங்களில் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர்களில் 22 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டவர்களில் 369 பேரும் ஆக மொத்தம் 391 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் மீதமுள்ள 5,706 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நேற்று நடந்தது.

செஞ்சி 

ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் 24 வார்டுகளை கொண்ட செஞ்சி ஒன்றியத்தில் தி.மு.க. 21 இடங்களிலும், அ.தி.மு.க. 21 இடங்களிலும், பா.ஜ.க. 2 இடங்களில், தே.மு.தி.க. 12 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் போட்டியிட்டன. 
இதில் 1-வது வார்டு அன்னம்மாள்(தி.மு.க.), 2-வது வார்டு சாவித்திரி(அ.தி.மு.க.), 3-வது வார்டு டிலைட் ஆரோக்கியராஜ்(தி.மு.க.), 4-வது வார்டு கேமல்(தி.மு.க.), 8-வது வார்டு புவனா(தி.மு.க.), 9-வது வார்டு கமலா(தி.மு.க.), 10-வது வார்டு முரளி(தி.மு.க.) ஆகியோர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

கண்டமங்கலம் 

கண்டமங்கலம் ஒன்றியத்தில் தி.மு.க. 22 இடங்களிலும், அ.தி.மு.க. 24 இடங்களிலும், பா.ஜ.க. 2 இடங்களிலும், தே.மு.தி.க. 9 இடங்களிலும், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலா ஒரு இடத்திலும் போட்டியிட்டன. 
இதில் 1-வது வார்டு தண்டபாணி(தி.மு.க.), 2-வது வார்டு ராஜவேலு(தி.மு.க.), 3-வது வார்டு கல்பனா(அ.தி.மு.க.), 4-வது வார்டு முத்துக்குமரன்(தி.மு.க.), 5-வது வார்டு ஹேமலதா(சுயேச்சை), 6-வது வார்டு சரண்யா(தி.மு.க.), 7-வது வார்டு சரவணன்(தி.மு.க.), 8-வது வார்டு ராசாத்தி(தி.மு.க.), 9-வது வார்டு நஜிராபேகம்(தி.மு.க.), 10-வது வார்டு சிவரஞ்சனி(காங்கிரஸ்), 11-வது வார்டு கலைராஜன்(தி.மு.க.), 13-வது வார்டு அமுதா தனஞ்செயன்(தி.மு.க.) ஆகியோர் வெற்றிபெற்றனர். 

ஒலக்‌கூர் 

16 வார்டுகளை கொண்ட ஒலக்கூர் ஒன்றியத்தில் தி.மு.க., அ.தி.மு.க. தலா 13 இடங்களிலும், பா.ஜ.க. 2 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒரு இடத்திலும், தே.மு.தி.க. 6 இடங்களிலும் போட்டியிட்டன. 
இதில் 1-வது வார்டு அண்ணாதுரை(தி.மு.க.), 2-வது வார்டு அன்பரசி ஜெயபிரகாஷ்(தி.மு.க.), 3-வது வார்டு அபினேஷ்வரி பிரபா(பா.ம.க.), 4-வது வார்டு விஜயபாஸ்கர்(சுயேச்சை), 5-வது வார்டு சுதா(சுயேச்சை), 12-வது வார்டு சுப்புலட்சுமி ராமசாமி(அ.தி.மு.க.) 13-வது வார்டு ராஜாராம்(தி.மு.க.), 14-வது வார்டு சிலம்பரசன்(பா.ம.க.) ஆகியோர் வெற்றிபெற்றனர். 

திருவெண்ணெய்நல்லூர் 

22 வார்டுகளை கொண்ட திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் தி.மு.க. 8 இடங்களிலும், அ.தி.மு.க. 11 இடங்களிலும், காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலா ஒரு இடத்திலும், தே.மு.தி.க. 8 இடங்களிலும் போட்டியிட்டன. 
இதில் 1-வது வார்டு உமாமகேஸ்வரி(தி.மு.க.), 2-வது வார்டு மல்லிகா(வி.சி.க.), 3-வது வார்டு தீபா(தி.மு.க.), 4-வது வார்டு மஞ்சுளா(தி.மு.க.), 7-வது வார்டு சுபாஷ்(சுயேச்சை), 9-வது வார்டு சரோஜா(தி.மு.க.) ஆகியோர் வெற்றிபெற்றனர். 

வானூர்

27 வார்டுகளை கொண்ட வானூர் ஒன்றியத்தில் தி.மு.க. 21 இடங்களிலும், அ.தி.மு.க. 25 இடங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தே.மு.தி.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா 2 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு இடத்திலும் போட்டியிட்டன.
இதில் 1-வது வார்டு சந்திரமோகன்(அ.தி.மு.க.), 2-வது வார்டு லதா(வி.சி.க.), 3-வது வார்டு வேல்முருகன்(அ.தி.மு.க.), 4-வது வார்டு சித்ரா(தி.மு.க.), 7-வது வார்டு அலமேலு(அ.தி.மு.க.), 8-வது வார்டு ராஜ்குமார்(பா.ம.க.), 12-வது வார்டு கணேசன்(அ.தி.மு.க.), 20-வது வார்டு பிரகாஷ்(அ.தி.மு.க.), 5-வது வார்டு பருவ கீர்த்தனா(தி.மு.க.) ஆகியோர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

விக்கிரவாண்டி 

21 வார்டுகளை கொண்ட விக்கிரவாண்டி ஒன்றியத்தில் தி.மு.க. 19 இடங்களிலும், அ.தி.மு.க. 20 இடங்களிலும், தே.மு.தி.க. 2 இடங்களிலும் போட்டியிட்டன. 
இதில் 1-வது வார்டு முகிலன(தி.மு.க.), 2-வது வார்டு அருணாசலம்(தி.மு.க.), 3-வது வார்டு சத்திய கோபாலகிருஷ்ணன்(தி.மு.க.), 4-வது வார்டு ஜீவிதா ரவி(தி.மு.க.), 5-வது வார்டு பாரதி சுரேஷ்(தி.மு.க.) ஆகியோர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

காணை 

காணை ஒன்றியத்தில் தி.மு.க. 19 இடங்களிலும், அ.தி.மு.க. 21 இடங்களிலும், பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா 2 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் தலா ஒரு இடத்திலும், தே.மு.தி.க. 6 இடங்களிலும் போட்டியிட்டன. 
இதில் வார்டு எண்-1 குபேந்திரன் (பா.ம.க.), வார்டு எண்-2 சவுபாக்கியம் (சுயேட்சை), வார்டு எண்- 3 ஜோதி (தி.மு.க.), வார்டு எண்- 4 பாரதிசசி (தி.மு.க.), வார்டு எண்-5 சுப்பிரமணி (தி.மு.க.), வார்டு எண்-6 பாரதி நாகராஜன்(தி.மு.க.), வார்டு எண்-7 சரவணன் (தி.மு.க.) வார்டு எண்-8 கலாவதி (தி.மு.க.), வார்டு எண்-9 சரசு தேவராசு (தி.மு.க.), வார்டு எண்-10 வீரராகவன் (தி.மு.க.), வார்டு எண்-13 கருணாகரன்(தி.மு.க.) ஆகியோர் வெற்றிபெற்றனர். 

கோலியனூர் 

20 வார்டுகளை கொண்ட கோலியனூர் ஒன்றியத்தில் தி.மு.க. 16 இடங்களிலும், அ.தி.மு.க. 18 இடங்களிலும், பா.ஜ.க. 2 இடங்களிலும், தே.மு.தி.க. 2 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் போட்டியிட்டன. 
இதில் வார்டு எண்-1 சிட்டிபாபு (தி.மு.க.), வார்டு எண்- 2 உதயகுமார் (தி.மு.க.), வார்டு எண்- 3 வசந்தா ராமசாமி (தி.மு.க.), வார்டு எண்- 4 வசந்தா சந்திரசேகர்(தி.மு.க.), வார்டு எண்-9 கீர்த்திகா சதீஷ் (தி.மு.க.), வார்டு எண்-10 தேனருவி (தி.மு.க.), வார்டு எண்-12 சிவக்குமார் (தி.மு.க.), வார்டு எண்-13 ஆதிலட்சுமி (தி.மு.க.), வார்டு எண்-18 அமுதா கணேசன் (அ.தி.மு.க.), வார்டு எண்-11 மஞ்சுளா ஆறுமுகம் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) ஆகியோர் வெற்றிபெற்றனர். 

மயிலம் 

21 வார்டுகளை கொண்ட மயிலம் ஒன்றியத்தில் தி.மு.க. 19 இடங்களிலும், அ.தி.மு.க. 20 இடங்களிலும், பா.ஜ.க., காங்கிரஸ் தலா ஒரு இடத்திலும் போட்டியிட்டன. இதில் 1-வது வார்டு கோமதி(தி.மு.க.), 2-வது வார்டு கீதா(தி.மு.க.), 3-வது வார்டு பரிதா(சுயேச்சை), 4-வது வார்டு உமா(தி.மு.க.), 5-வது வார்டு சாந்தகுமார்(தி.மு.க.), 6-வது வார்டு சரசு(தி.மு.க.), 7-வது வார்டு யோகேஸ்வரி(தி.மு.க.), 9-வது வார்டு ஜெயந்தி(சுயேச்சை), 12-வது வார்டு தனலட்சுமி(தி.மு.க.), 13-வது வார்டு செல்வம்(அ.தி.மு.க.) ஆகியோர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

மரக்காணம் 

மரக்காணம் ஒன்றியத்தில் தி.மு.க. 24 இடங்களிலும், அ.தி.மு.க. 25 இடங்களிலும், பா.ஜ.க., பகுஜன் சமாஜ் கட்சி தலா ஒரு இடத்திலும், தே.மு.தி.க. 10 இடங்களிலும் போட்டியிட்டன. 
இதில் 1-வது வார்டு வேலாயுதம்(தி.மு.க.), 7-வது வார்டு பாலா(தி.மு.க.), 9-வது வார்டு திருநாவுக்கரசு(தி.மு.க.), 10-வது வார்டு மகாலட்சுமி(சுயேச்சை), 11-வது வார்டு நாகஜோதி(தி.மு.க.), 12-வது வார்டு கன்னியம்மாள்(தி.மு.க.), 13-வது வார்டு பழனி(தி.மு.க.), 14-வது வார்டு அமுதா(தி.மு.க.) 16-வது   வார்டு விநாயகம்(பா.ம.க) ஆகியோர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

மேல்மலையனூர் 

24 வார்டுகளை கொண்டது, மேல்மலையனூர் ஒன்றியம். இதில் தி.மு.க. 24 இடங்களிலும், அ.தி.மு.க. 22 இடங்களிலும், பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தலா 2 இடங்களிலும், தே.மு.தி.க. 14 இடங்களிலும் போட்டியிட்டன. இந்த ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் மேல்மலையனூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 
இதில் 1-வது வார்டு கிருஷ்ணமூர்த்தி(சுயேச்சை), 2-வது வார்டு கார்த்திகேயன்(தி.மு.க.), 3-வது வார்டு செல்வி ரகுபதி(தி.மு.க.), 4-வது வார்டு செந்தாமரை கெம்பீரம்(அ.தி.மு.க.), 5-வது வார்டு சிவசக்தி(தி.மு.க.), 6-வது வார்டு பெருமாள்(தி.மு.க.), 7-வது வார்டு பிரியா(அ.தி.மு.க.) ஆகியோர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

வல்லம் 

வல்லம் ஒன்றியத்தில் தி.மு.க. 19 இடங்களிலும், அ.தி.மு.க. 20 இடங்களிலும், பா.ஜ.க. 2 இடங்களிலும், தே.மு.தி.க. 11 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் போட்டியிட்டன. இதில் 1-வது வார்டு இந்துமதி(தி.மு.க.), 2-வது வார்டு அமிர்தம்(தி.மு.க.), 3-வது வார்டு கோமதி(தி.மு.க.), 4-வது வார்டு ராஜேந்திரன்(அ.தி.மு.க.), 5-வது வார்டு ஜெயலலிதா(அ.தி.மு.க.), 6-வது வார்டு ஏழுமலை(தி.மு.க.), 7-வது வார்டு மலர்விழி அண்ணாதுரை(தி.மு.க.), 8-வது வார்டு பிரபாகரன்(பா.ம.க.), 9-வது வார்டு பத்மநாபன்(தி.மு.க.) ஆகியோர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

முகையூர் 

23 வார்டுகளை கொண்ட முகையூர் ஒன்றியத்தில் தி.மு.க. 19 இடங்களிலும், அ.தி.மு.க. 22 இடங்களிலும், பா.ம.க., அ.ம.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்திலும், பா.ஜ.க. 3 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி 2 இடங்களிலும், தே.மு.தி.க. 11 இடங்களிலும் போட்டியிட்டன. இதில் அதிக வார்டுகளில் தி.மு.க. வேட்பாளர்களே முன்னிலையில் இருந்தனர்.
 12 ஊராட்சி ஒன்றியங்களை தி.மு.க. கைப்பற்றும் 
ஓட்டு எண்ணிக்கை விடிய, விடிய நடந்தது. அனைத்து ஒன்றியங்களிலும் யார்-யார்? வெற்றிபெற்றார்கள் என்ற விவரம் இன்று(வியாழக்கிழமை) முழுமையாக தெரியவரும். விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை 12 ஊராட்சி ஒன்றியங்களிலும் தி.மு.க. வேட்பாளர்களே முன்னிலையில் இருக்கிறார்கள். எனவே 12 ஊராட்சி ஒன்றியங்களையும் தி.மு.க. கைப்பற்றும்.
வானூரில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. சரிசமமான இடங்களை பெறும். எனவே அங்கு இழுபறி ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

Next Story