மாரியம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை


மாரியம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை
x
தினத்தந்தி 13 Oct 2021 12:38 AM IST (Updated: 13 Oct 2021 12:38 AM IST)
t-max-icont-min-icon

மாரியம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.

சிவகிரி:

சிவகிரி அருகே ராமநாதபுரம் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட மழை மாரியம்மன் கோவிலில் புரட்டாசி மாத பொங்கல் விழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் காலை, மாலை, இரவு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. 18 வகையான நறுமண பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது.

4-ம் நாளன்று 1,008 திருவிளக்கு பூஜை கோவிலில் நடந்தது. நாடார் உறவின் முறை தலைவர் ஜெயகுரு நாடார், செயலாளர் கணேசன், பொருளாளர் ஜெயகோதண்டராமன் ஆகியோர் தலைமை தாங்கினர். விழா கமிட்டியைச் சேர்ந்த தலைவர் மருதக்கனி நாடார், செயலாளர் கணேசன், பொருளாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெண்கள் குழு சார்பாக 1,008 திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டு பக்தி பாடல்கள் பாடப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ராமநாதபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான கூடலூர், பனையூர், வாசுதேவநல்லூர், புளியங்குடி, சிவகிரி, ராயகிரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story