ஊராட்சி தலைவரின் வெற்றியை கேட்டவர் அதிர்ச்சியில் சாவு
வெற்றியை கேட்டவர் அதிர்ச்சியில் உயிரிழந்தார்
பொன்னமராவதி
பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்ட நிலையில் அரசமலை ஊராட்சி மன்ற தலைவராக பழனிவேலு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அப்போது பழனிவேலுவின் உறவினர் முருகன் என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பழனிவேலு வெற்றி அறிவிப்பை கேட்டு மகிழ்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story