திருமண ஏற்பாடு செய்த நிலையில் காதலன் தற்கொலை


திருமண ஏற்பாடு செய்த நிலையில் காதலன் தற்கொலை
x
தினத்தந்தி 13 Oct 2021 12:57 AM IST (Updated: 13 Oct 2021 12:57 AM IST)
t-max-icont-min-icon

விராலிமலை அருகே காதலிக்கு குழந்தை பிறந்ததால் திருமண ஏற்பாடு செய்த நிலையில் காதலன் தற்கொலை செய்து கொண்டார்

விராலிமலை
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகாவிற்கு உட்பட்ட கீழபொருவாய் கிராமத்தை சேர்ந்தவர் மலைக்கண்ணு என்கிற நல்லு. இவரது மகன் ராமராஜ் (வயது 19). இவர், 19 வயதுடைய இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். நாளடைவில் அவர்களிடையே நெருக்கம் அதிகரிக்கவே, கர்ப்பமடைந்த அப்பெண் கடந்த 4 நாட்களுக்கு முன்பு குழந்தை பெற்றுள்ளார். இதனையடுத்து அப்பெண்ணின் குடும்பத்தினர், ராமராஜின் குடும்பத்தினருடன் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பேசி இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
காதலன் தற்கொலை
இந்தநிலையில் நேற்று ராமராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story