நெல்லை மாவட்ட பஞ்சாயத்தை தி.மு.க. கைப்பற்றுகிறது


நெல்லை மாவட்ட பஞ்சாயத்தை தி.மு.க. கைப்பற்றுகிறது
x
தினத்தந்தி 13 Oct 2021 1:04 AM IST (Updated: 13 Oct 2021 1:04 AM IST)
t-max-icont-min-icon

அதிக இடங்களில் முன்னிலை பெற்றதன் மூலம் நெல்லை மாவட்ட பஞ்சாயத்தை தி.மு.க. கைப்பற்றுகிறது.

நெல்லை:
அதிக இடங்களில் முன்னிலை பெற்றதன் மூலம் நெல்லை மாவட்ட பஞ்சாயத்தை தி.மு.க. கைப்பற்றுகிறது.

வாக்குப்பதிவு

ஊரக உள்ளாட்சி தேர்தலில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 12 வார்டுகளை கொண்ட நெல்லை மாவட்ட பஞ்சாயத்துக்கும் தேர்தல் நடந்தது.  இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நேற்று எண்ணப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தி.மு.க. வேட்பாளர்கள் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தனர். வாக்கு எண்ணிக்கை விடிய விடிய நடைபெற்றது.
இதில் மொத்தமுள்ள 12 வார்டுகளில் 3 இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அவை அனைத்திலும் தி.மு.க. வெற்றி பெற்றது. 1-வது வார்டில் செல்வலட்சுமி அமிதாப், 3-வது வார்டில் கனகராஜ், 12-வது வார்டில் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர். 

தி.மு.க. கைப்பற்றுகிறது 

மீதமுள்ள 8 இடங்களில் தி.மு.க.வும், ஒரு இடத்தில் காங்கிரசும் முன்னிலையில் உள்ளது.
இதன்மூலம் நெல்லை மாவட்ட பஞ்சாயத்தை தி.மு.க. கைப்பற்றுவது உறுதியாகி உள்ளது.

Next Story