ஆடு திருடிய 2 பேர் கைது; லோடு ஆட்டோ பறிமுதல்
ஆடு திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டை இளங்கோ நகர் கீழத் தெருவை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 70). விவசாயி. இவர் தனது வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார். இவர் தினமும் தனது ஆடுகளை அந்தப் பகுதியில் உள்ள வயல்வெளியில் மேய்ச்சலுக்கு அனுப்புவது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் மேய்ச்சலுக்கு அனுப்பிய ஆடுகளில் இரண்டு ஆடுகளை 2 மர்ம நபர்கள் லோடு ஆட்டோவில் ஏற்றியுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாயாண்டி அந்த பகுதியில் உள்ள பொதுமக்களின் உதவியுடன் மர்ம நபர்கள் 2 பேரையும் கையும் களவுமாக பிடித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் ராஜவல்லிபுரம் வ.உ.சி.நகரை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (33), கணேசன் மகன் செந்தில்வேல் முருகன் (31) என்பதும் அவர்கள் ஆடுகளை திருட முயன்றதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் ஆடுகளை திருட பயன்படுத்திய லோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story