மாவட்ட செய்திகள்

பெண் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Suicide

பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பெண் தூக்குப்போட்டு தற்கொலை
ஸ்ரீரங்கம், அக்.13-
திருச்சி ஸ்ரீரங்கம் பாரதி தெருவை சேர்ந்தவர் ஜெகன். இவருடைய மனைவி சுகந்தி (வயது 26). இவர்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. தற்போது, இவர்களுக்கு 8 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த மாதம்14-ந்தேதி சுகந்தி வீட்டில் தனியாக இருந்த போது, ஜோதிடம் பார்ப்பதாக கூறி 35 வயது மர்ம ஆசாமி ஒருவர் வந்துள்ளார்.

அவர் சுகந்தியிடம் பரிகார பூஜை செய்யவேண்டும் என்று கூறி, அவர் அணிந்திருந்த தங்க தாலி சங்கிலியை வாங்கியுள்ளார். பின்னர் அவருடைய கவனத்தை திசை திருப்பி, தாலி சங்கிலியை திருடிச்சென்று விட்டார். தாலியை பறிகொடுத்த சுகந்தி கடந்த சில நாட்களாக மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்தார்.
இந்தநிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சுகந்தி, நேற்று முன்தினம் காலை வீட்டின் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் சுகந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதற்கிடையே சுகந்தியின் சாவில் மர்மம் இருப்பதாக அவருடைய உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர்களுக்கு திருமணம் ஆகி 1½ ஆண்டுகளே ஆவதால் ஸ்ரீரங்கம் உதவி போலீஸ் கமிஷனர் சுந்தரமூர்த்தியும் விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. டீக்கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
டீக்கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. பெண்கள் உள்பட 3 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
3. 200 அடி உயர மின் கோபுரத்தில் ஏறி விவசாயி தற்கொலை
மேல்மலையனூர் அருகே இழப்பீடு தொகை தராததால் 200 அடி உயர உயர மின்கோபுரத்தில் ஏறி விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
4. பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
மதுரையில் பிளஸ்-2 மாணவி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். “புதிய பயணத்தை நோக்கி செல்கிறேன்” என்று அவர் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
5. 2 குழந்தைகள் பிறந்து இறந்த நிலையில் 8 மாத கர்ப்பிணி தற்கொலை
2 குழந்தைகள் பிறந்து இறந்த நிலையில் 3-வது குழந்தையும் இறந்து விடுமோ என்ற அச்சத்தில் 8 மாத கர்ப்பிணி, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.