வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா தடுப்பூசி


வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 13 Oct 2021 1:19 AM IST (Updated: 13 Oct 2021 1:19 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

ஊரக உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் நெல்லை, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது.

அம்பை யூனியனுக்கு விக்கிரமசிங்கபுரம் அமலி மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், சேரன்மாதேவி யூனியனுக்கு பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், மானூர் யூனியனுக்கு பழையபேட்டை ராணி அண்ணா மகளிர் கல்லூரியிலும், பாளையங்கோட்டை யூனியனுக்கு ரோஸ்மேரி கல்லூரியிலும், பாப்பாக்குடி யூனியனுக்கு இடைகால் மெரிட் பாலிடெக்னிக் கல்லூரியிலும், நாங்குநேரி யூனியனுக்கு ரெட் தொழில்நுட்பக் கல்லூரியிலும், களக்காடு யூனியனுக்கு திருக்குறுங்குடி டி.வி.எஸ்.அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ராதாபுரம் யூனியனுக்கு தெற்குகள்ளிகுளம் தட்சணமாற நாடார் சங்க கல்லூரியிலும், வள்ளியூர் யூனியனுக்கு எஸ்.ஏ.ராஜா கல்லூரியிலும் நடைபெற்றது.

தடுப்பூசி

இந்த மையங்களுக்கு வந்தவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்கு வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. மேலும் மையத்தின் நுழைவுவாயிலில் கொரோனா தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 
கொரோனா தடுப்பூசி போடும் பணியும் நடந்தது.பாளையங்கோட்டை ரோஸ்மேரி கல்லூரியில் நடந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் சிலர் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசியும் போட்டுச் சென்றனர்.

Next Story