வாளை காட்டி பணம் கேட்டு மிரட்டியவர் கைது


வாளை காட்டி பணம் கேட்டு மிரட்டியவர் கைது
x
தினத்தந்தி 13 Oct 2021 1:19 AM IST (Updated: 13 Oct 2021 1:19 AM IST)
t-max-icont-min-icon

வாளை காட்டி பணம் கேட்டு மிரட்டியவர் கைது

ராமநாதபுரம்
ராமநாதபுரம் அண்ணாநகர் குட்செட் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது52). இவர் அந்த பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரின் கடைக்கு இரவில் ஆட்டோவில் வந்த இளங்கோவடிகள் தெருவை சேர்ந்த பூமிநாதன் (30) என்பவர் வாளை காட்டி பணம் கேட்டு மிரட்டினாராம். இதற்கு ஆனந்தன் தர மறுத்ததால் ஆத்திரமடைந்து அங்கிருந்த பொருட்களை வாளால் தாக்கி சேதப்படுத்தி விட்டாராம். இதுகுறித்து ஆனந்தன் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குபதிவு செய்து பூமிநாதனை கைது செய்தனர்.

Next Story